இலங்கையில் ஹஜூரிய்யா இயக்கம்

الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده
أما بعد

ஸ்ரீ லங்கா நாட்டில் உள்ள சர்ச்சைகளில் ஒரு பெரும் பெரிய சர்ச்சை ஆக இருப்பது என்னவென்றால், இயக்க வாதியாக இருக்கும் அத்தார் அஸ் ஸலபிய்யா நீர் கொழும்பு கூட்டம் , பல காலமாக ஸலபி தஃவாவுக்கு எல்லா விதமான எதிர்ப்புகளும் காட்டினார்கள். 
இப்போது, இந்த கூட்டம் ஸலபி தஃவா வை உடைப்பதற்காக தம்மாஜ் இல் நுழைந்து உள்ளார்கள். 

அதனுள் நுழைந்துக் கொண்டு , ஸலபி தஃவாவை உடைப்பதற்கு காத்துக் கொண்டு இருக்கிறார்கள் , முயற்சி செய்கிறார்கள்.  இது தம்மாஜ் ஹஜுரிய்யா இயக்கவாதிகள் பின்னால் இருக்கும் பையன்களாலும் , கூட்டங்களாலும் செய்யப்படும் காரியங்களாகும். 

ஸலபிய்யா எ‌ன்று பெயர் மாட்டிக்கொண்டு சத்தியமான ஸலபிய்யாவின் பெயரில் எதிரிகளின் கொள்கைகளை வளர்க்கிறார்கள். இலங்கையில் உள்ள இயக்கவாதி நிறுவனமான அத்தார் அஸ்ஸலபிய்யா செண்டர் நிறுவனத்துடன் இணைந்து தஃவாவை தம்மாஜ் ஹாஜூரியூன் கூட்டங்கள் முன்னெடுத்து செல்வதை பலரும் அறிந்து இருப்பீர்கள். 

இந்த அத் தார் அஸ்ஸலபிய்யா செண்டர் இயக்கவாதிகளை ; நாம் அறிந்தவரை எந்த உலமாவுஸ் ஸுன்னாவும் தஃவாவில் இணைந்து செயல்பட பரிந்துரை செய்யவில்லை. மேலும், இவர்களின் நிலைப்பாட்டை தம்மாஜ் ஐ சேர்ந்த நவ்வாஸ் என்ற நபர் எம்முடன் சேர்ந்து இருக்கும் போது அறிந்து ஒதுங்கி இருந்தார் என்பதையும் சிலர் அறிந்திருப்பீர்கள். 

பின்னர், தம்மாஜ் யில் கல்வி கற்பது பற்றி உலமாக்கள் எச்சரிக்கை செய்தபோது, அந்த அச்சரிக்கையை நாமும் முன்வைத்த போது, எம்மீது சினங் கொண்டு பிரிந்து இந்த இயக்கவாதி அத் தார் அஸ்ஸலபிய்யா சென்டரை வளர்க்க இந்த தம்மாஜ் கூட்டங்கள் கைகோர்த்து விட்டன. 

அந்த வகையில் , அப்துல் ஹமீத் ஹஜூரி , அபூ முஆத் ஹுசைன் ஹுதைபி , தற்போது அப்துர் ரகீப் கவ்கபாணி போன்ற யஹ்யா அல் ஹாஜூரிக்கு நன்கு அறிமுகமானவர்கள் ஸ்ரீ லங்காவுக்கு வந்து இந்த இயக்கவாதி அத் தார் அஸ்ஸலபிய்யா சென்டருடன் சேர்ந்து தஃவா செயல்பாட்டில் ஈடுபடுகின்றனர். 

அந்த வகையில், நேரத்திற்கு நேரம் எம்முடைய மஸாயில் விடயங்களை தூக்கி பிடித்து மழுப்பல் மறுப்புக்களை முன்வைத்து ஷேக் ரபி இப்னு ஹாதி அல் மத்கலி மற்றும் ஏனைய உலமாவுஸ் ஸுன்னாவாலும் பரிந்துரை செய்யப்பட்ட ஷேக் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்களின் தஃவாவை குழப்ப , மக்கள் அவரிடம் பிரயோசனம் அடைவதை தடுக்க , தம்மாஜில் இருந்து இங்கு வந்து தமிழ் பாசையும் தெரியாமல் தடுமாறி வருகின்றனர். 

அந்த வகையில், ஷேக் யஹ்யா சில்மி அவர்களின் தஃவாவில் கொள்கை வழிமுறை சம்பந்தப்பட்ட விடயங்களில் குறை காண முடியாமல், மஸாயில் விடயங்களை, அதுவும் இமாம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, இப்னு மசூத் ரலியல்லாஹு அன்ஹு போன்றவர்களின் விளக்கத்தின் அடிப்படையிலும் , 

இமாம் இப்னு தைமிய்யா, இமாம் சவ்க்காணி, இமாம் சித்தீக் ஹசன் கான் , இமாம் அல்பானி போன்றவர்களின் விளக்கங்களுடனான பிக்ஹ் கருத்துக்களை முன்வைப்பதை எதிர்த்து, ஷேக் யஹ்யா அவர்கள் இலங்கை நாட்டில் செய்யும் அழைப்பு பணிக்கு ஒரு சர்ச்சையாக, முட்டுக் கட்டையாக, அதனை தடுக்க ; முடக்க ஈடுபட்டு வருகின்றனர். 

பாவம் இவர்கள். என்றாலும், இவர்களால் அந்த உறுதியான மசாயில்களை எதிர்க் கொள்ள முடியாமல், சும்மா வாய்க்கு வந்தபடி , ஹாஜூரியூன் அடிப்படையில் பேசி திரிகிறார்கள். 

உலமாக்களின் பத்வா என்று ; அதில் அவர்களுக்கு சார்பானவற்றை சொல்லி, ஏனையவைகளை மறைப்பதும், அருமை சஹாபாக்களின் விளக்கங்களை கூட தூக்கி எரிந்து பேசுவதும், வெறும் யூகங்களையும் கற்பனைகளையும் மார்க்கத்தில் புகுத்தி சொல்லி, யஹ்யா அல் ஹாஜூரியின் கருத்துக்களை மார்க்கமாகக ஒரு முயற்சியாக செய்துக் கொண்டு இருக்கிறார்கள். 

அதில் இரண்டு உதாரணம் தான், ஜும்மா தொழுகையை முற்படுத்தியதையும் , அத்தஹியாத்தில் இப்னு மசூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் விளக்கத்தின் அடிப்படையில் அஸ்ஸலாமு அலைக்க அலன் நபி என்று சொல்வதையும் தூக்கி பிடித்து , சரமாரியாக வாய்க்கு வந்தபடி பேசி திரிகிறார்கள். 

இவ்வாறான நடவடிக்கை, பித் அத் வாதிகளின் தெளிவான அடையாளங்கள் என்பது சிலர் அறிந்திருக்கலாம். பிக்ஹ் விடயத்தில் பிடிவாதமும் இயக்கவாதிகளின் அடையாளமும். 

இதில் இன்னும் வேடிக்கை தான் , இவர்களின் தலைவர் , யஹ்யா அல் ஹாஜூரி அருமை சஹாபி உஸ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பித்அத் செய்தார்கள் என்று சொல்வதும், ஏனைய ஸலபி உலமாக்களை வசைபாடி திரிவதும். 

எனவே, இலங்கை நாட்டில் இவரது மாணவர்கள் இப்படி ஸலபி தஃவா க்கு எதிராக கூத்தடிப்பதும் , மக்களை குழப்ப முயற்சிப்பதும் ஆச்சரியம் இல்லை. 

தலைவர் எவ்வழியோ அவ்வழியில் அவரது மக்கள். 

இன்னும், தற்காலத்தில் வாழும் உலமாவுஸ் ஸுன்னா ஜரஹ் வ தஃதீல் இமாம் என்று போற்றப்படும் ஷேக் ரபி இப்னு ஹாதி அல் மத்கலி ஹபித்தஹுல்லாஹ் அவர்கள் ஷேக் யஹ்யா சில்மி ஹபிதஹுல்லாஹ் அவர்கள் "ஹமலதுல் இல்ம் " , " இல்மை சுமந்தவர் ", அதாவது "ஆலிம் " என்று குறிப்பிட்டு இலங்கை நாட்டில் ஸலபி தஃவாவிற்கு பரிந்துரை செய்து உள்ளார்கள். 

http://www.4shared.com/file/36755005/2ef40bd9/TazkiyyahForYahyaSilmyfromSheikhRabe.html

இன்னும் தற்காலத்தில் வாழும் உலமாவுஸ் ஸுன்னா , ஷேக் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் அல் அக்கீல் ஹபிததுல்லாஹ் அவர்கள் , எங்கள் சகோதரர் ஷேக் யஹ்யா சில்மி ஹபித்துல்லாஹ் அவர்கள் அஹ்லுஸ் சுன்னா உலமாவை சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு சொல்லி பரிந்துரை செய்து உள்ளார்கள். 

https://www.4shared.com/mp3/50FehsBG/QUESTION_AND_ANSWER_WITH_SHEIK.html

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த கிபாருல் உலமா ஷேக் ஸைத் அல் மத்கலி ஹபித்துல்லாவின் மகனும் உலமாவுஸ் ஸுன்னாவை சேர்ந்த அறிந்ஜருமான ஷேக் அபூ ஹாத்திம் அலி இப்னு ஸைத் அல் மத்கலி ஹபித்தஹுல்லாஹ் அவர்கள் , ஷேக் யஹ்யா சில்மி ஹபித்துல்லாஹ் அவர்கள் உலமாவுஸ் ஸுன்னாவை சேர்ந்த இந்த நாட்டில் வாழும் அறிஞ்சர் என்று பரிந்துரை செய்து ; ஷேக் யஹ்யா சில்மி ஹபித்தஹுல்லாஹ் அவர்களுடன் சேர்ந்து பாடங்கள் நடத்தி மக்களுக்கு ஆர்வமும் ஊட்டிச் சென்றார்.

https://www.4shared.com/audio/MIVEWiUb/converted-14e3152b72d7ce.html?
இவ்வாறு விடயங்கள் மிகத் தெளிவாக இருக்க , இந்த ஹஜூரியூன் இயக்க வாதிகள் தங்களது ஹஜூரியா இயக்கத்தை வளர்க்க இங்கே பொய் புரட்டுகளை சுன்னாவுடைய இமாம்களுக்கே சுமத்தி தடுமாறுகின்றனர். 

அந்த வகையில் ஹஜூரிய இயக்கவாதி அப்துர் ரகீப் கவ்கபாணி சொன்ன பொய் புரட்டுக்களுக்கு பதில் சொல்லப்பட்டு இருக்கிறது. இதன் அரபி மற்றும் தமிழ் ஒலிப்பதிவுகளை எமது இணையத்தளத்திலும் , எமது காரியாலயத்திலும் பெற்றுக் கொள்ளலாம். 

ஹஜூரி இயக்கவாதிகளின் தன்மைகள் 
தம்மாஜ் அழைப்பு பனி சீர்திருத்தமா?? சீரழிவா?? https://dc531.4shared.com/download/Ppx8OAy5/converted-58a4f84c.mp3 
ஜும்ஆ வை முற்படுத்தி தொழுவது https://www.4shared.com/mp3/XGLSrDBF/PLTML20130428_Kadumaiyaana_soo.html 
ஹிஸ்பியூன் நீர் கொழும்பு அத் தார் அஸ் ஸலபிய்யா வின் சூழ்ச்சிகளும் தம்மாஜ் னுள் அதன் பிரவேசமும் தம்மாஜ் மக்கள் அவர்களுடன் சகவாசமும் http://tamilsalafi.edicypages.com/693393205264/dammaj-trouble-makers
இலங்கையில் தம்மாஜ் மக்களின் குழப்பங்களும் அபாண்டங்களும் அதற்கான சான்றுகளும் நிருபிக்கப்பட்ட ஆதாரங்களும்

  • பித்அத்வாதியின் சபைகளில் அமர்ந்து ,அவர்களுடன் கலந்து இருந்து , அவர்களை திருத்த முயற்சி எடுக்கலாமா ? அஹ்லுஸ் ஸுன்னாஹ் வல் ஜமாஆ கொள்கைக்கு எதிரான டாக்டர் நுபாரின்   பதில் இதோ...


Voog. Make a website.