ஹஜூரிய்யா இயக்க பின்னணி 
الحمد لله رب العالمين والصلاة والسلام على من لا نبي بعده أما بعد
ஸுன்னாவின் கொடியை உயர்த்துபவர்கள் என்று அறிந்துக் கொண்டே , ரசூளுல்லாவின் ஸுன்னாவை உயிர்பிக்க கூடியவர்கள் என்று அறிந்துக் கொண்டே , குர் ஆன் ஸுன்னா சஹாபா விளக்கத்தை உயிரூட்டுபவர்கள் என்று அறிந்துக் கொண்டே , எதிர்ப்பு பக்கத்திற்கு சார்ந்து , உலமாவுஸ் ஸுன்னாவை விமர்சித்து, கேவலமாக்கி , அவர்களது தவறுகளை பெரிதாக்கி காட்டி , மக்களையும் சமூகங்களையும் வழி கெடுக்க முடியாது.

அப்படி மறுத்து , கெடுத்து விட்டால் ஸுன்னாவின் எதிரி தான். குர் ஆன் ஸுன்னாவின் எதிரியாகி விடுவார்கள்.உண்மையிலேயே இன்று ஸலப் மக்களுக்கு மத்தியில் யஹ்யா அல் ஹஜூரி அவர்களின் நடவடிக்கைகள் ; பிரிவினைகளையும் , எதிர்ப்புகளையும் ஏற்படுத்துவதாகவே அமைந்து உள்ளது. 


இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் , ஸலப் மக்கள் மத்தியில் அடிப்படையாக எந்த காரணங்களும் ஆதாரங்களும் இல்லாமல் பிரிவினைகளையும் , பிரச்சனைகளையும் ஏற்படுத்துபவர்களாக தான் செயல்படுகிறார்கள்.

இப்படியான நேரத்தில் , இந்த உம்மத்திற்கு உலமாவுஸ் சுன்னாஹ் அறிவுரைகள் வழங்க எடுக்கும் முயற்சிகளுக்கு , நாம் ஒவ்வொருவரும் சத்தியத்திற்கு ஒத்துழைப்பு செய்வதின் முக்கியத்தை அறிந்து , நாம் அவர்களுக்கு தோள் கொடுத்து நிற்க வேண்டும்.

உலமாக்களின் உபதேசத்தின் அடிப்படையில் , நாமும் இந்த தம்மாஜ் மர்கஸினால் ஏற்பட்டுள்ள பித்னாவை அறிந்து அதை நோக்கி ஆர்வமாக கல்வி கற்க முன்னிரங்கி செல்வதையும், அங்குள்ள மக்களுக்கு ஒத்துழைப்பு செய்வதையும் எச்சரிக்கிறோம்.

தம்மாஜ் என்ற ஊரை நோக்கி சென்று கல்வி கற்பது பற்றி 

  • ஷேக் ரபியல் மத்ஹலி ஹபிதஹுல்லாஹ் பேசி இருக்கிறார்கள். 
  • ஷேக் முஹம்மத் இப்னு ஹாதி அல் மத்ஹலி ஹபிதஹுல்லாஹ் பேசி இருக்கிறார்கள். 

இன்னும் ஏனைய உலாம்வுஸ் ஸுன்னா பேசி இருக்கிறார்கள்.

அதாவது, அவர்கள் கூறுவதாவது , அங்கு சென்றவர்கள் கடுமையாக ஏனைய ஸலபுஸ் ஸாலிஹீன்களின் உலமாக்ககளை விமர்சனம் செய்வதிலும், இழிவாக்குவதிலும் , நாக்கிலே கூச்சமும் வெட்கமும் இல்லாமல் பகிரங்கமாக பேசுகிறார்கள்.

இதன் காரணமாக தம்மாஜ் சென்று கல்வி பெறுவதை தவிர்த்துக் கொள்வதை உலமாவுஸ் ஸுன்னா உபதேசிக்கிறார்கள். அதுவும்  முக்கியமான ஸலப் உலமாக்கள் இவ்வாறு உபதேசிக்கிறார்கள்.

Voog. Make a website.